உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / முறைகேடாக ரூ.100 கோடிக்கு சொத்து சேர்த்த முன்னாள் சார்பதிவாளர்: பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

முறைகேடாக ரூ.100 கோடிக்கு சொத்து சேர்த்த முன்னாள் சார்பதிவாளர்: பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: திருச்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் சார்பதிவாளர், அவரது மனைவி ஆகியோருக்கு, சிறப்பு நீதிமன்றத்தில் ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.திருச்சி மாவட்டம், முசிறி அருகே, பில்லாதுறை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன், 79. இவர், 1989 - 1993ம் ஆண்டு காலக்கட்டத்தில், துறையூர், உறையூர், முசிறி, அட்டுவம்பட்டடி, வில்பட்டி, கொடைக்கானல் ஆகிய இடங்களில் சார்பதிவாளராக பொறுப்பு வகித்துள்ளார். இந்த காலக்கட்டத்தில், வருமானத்திற்கு அதிகமாக சட்ட விரோதமான வகையில் அவரது பெயரிலும், அவரது மனைவி வசந்தி, 65, என்பவர் பெயரிலும் 32 லட்சத்து, 25 ஆயிரத்து 532 ரூபாய்க்கு சொத்துக்கள் வாங்கியுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bpvbg7cc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஜானகிராமன் பெயரிலும், அவரது மனைவி வசந்தி பெயரிலும் வில்பட்டி மற்றும் கொடைக்கானல் பகுதியில் வாங்கிய சொத்தின் தற்போதைய மதிப்பு மட்டும் ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, கடந்த 2001ம் ஆண்டு ஆக.,17ல் அப்போதைய திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் அம்பிகாபதி, அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்தார். வழக்கின் புலன் விசாரணை முடித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரணையில் இருந்து வந்த வழக்கின் தொடர் விசாரணையை தற்போதைய டி.எஸ்.பி., மணிகண்டன், இன்ஸ்பெக்டர் சேவியர்ராணி, எஸ்.ஐ., பாஸ்கர் மற்றும் சிறப்பு அரசு வக்கீல் சுரேஷ்குமார் ஆகியோரால் நடத்தப்பட்டது.திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் இந்த வழக்கை விசாரித்தார். விசாரணை முடிவில், முன்னாள் சார்பதிவாளர் ஜானகிராமன் மற்றும் அவரது மனைவி வசந்தி ஆகிய இருவருக்கும் தலா 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். மேலும், வருமானத்திற்கு அதிகமாக சேர்க்கப்பட்ட ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்து, அரசுக்கு ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

ஆரூர் ரங்
ஏப் 25, 2024 21:49

பொன்முடி வழக்கு மாதிரி முதிய வயதைக் காரணம் காட்டி ஜாமீன் பிறகு தண்டனைக்கு தடையுத்தரவு கிடைக்கலாம். . நல்ல நீதி.


M Ramachandran
ஏப் 25, 2024 19:55

மலை முழுங்கி ஏர்ப்பம் விட திறமயானவர் இது இந்த தீ மு அரசு வந்ததிலிருந்து தான் இவ்வளவு தைறியம்


M S RAGHUNATHAN
ஏப் 25, 2024 19:42

இவர்கள் பொன்முடி போன்று பிரபலமானவர்கள் அல்ல உச்ச நீதி மன்றம் சென்று வாதாட


M S RAGHUNATHAN
ஏப் 25, 2024 19:39

நிச்சயம் மேல்முறையீடு செய்வார்கள் மேலும் வருடங்கள் செல்லும் குற்றவாளிகள் பர லோகம் சென்று விடுவர்


Godfather_Senior
ஏப் 25, 2024 19:23

அதனாலென்னங்க, இப்போதைக்கு அப்பீல் செய்தால் இன்னும் ஒரு பத்து அல்லது இருப்பது வருஷத்துல நீதி கிடைச்சுடும் இன்னும் சொல்ல போனால், உச்ச நீதி மன்றம் இவர்களை விடுதலை செய்து நஷ்ட ஈடு கொடுக்கச்சொன்னாலும் சொல்லுவார்கள் அதுதான் இன்றய உச்ச நீதிமன்றம் செயல்பாடு திருடனயே மீண்டும் மந்திரியாக நியமிக்க கவர்னரை மிரட்டினவங்கதானுங்க நம்ப CJI


Jysenn
ஏப் 25, 2024 19:17

Tirunelveli district Panakudi sub registrar Mrs Selvi is minting money like anything She daily carrys home an amount not less than lakhs collected from the brokers on her scooty after the office timeThe court should confiscate the illegally amassed wealth of Mrs Selvi


GMM
ஏப் 25, 2024 19:07

பத்திர பதிவில் முறை கேடாக சார் பதிவாளர் சொத்து சேர்க்க விற்பவர்/வாங்குபவர் தவறான பதிவிற்கு லஞ்ச பணம் உதவி இருக்கும் நேர்மையான பதிவிற்கு கொஞ்ச பணம் கிடைக்கும் அல்லது கிடைக்காது இதில் அரசியல் ஊழல் லஞ்ச ஒழிப்பு பிரிவு மறந்து விட்டது? விற்பவர்/வாங்குபவர் வழக்கில் இணைத்து விசாரிக்க பயன் பெற்றவர் தெரிய வரும் அரசியல் பின் புலம் வெளியே தெரியும் அரை குறை உத்தரவு ?


Lion Drsekar
ஏப் 25, 2024 17:54

இதே போல் எல்லா துறைகளிலும் உள்ளே நீதிமன்றம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்தால் , அடுத்த பல ஆண்டுகளுக்கு எல்லா மக்களுக்கும் முழு வரி இலக்கு அளிக்கலாம் அல்லது அந்த தொகையை வைத்து நாட்டின் நதிகளை இணைப்பது , விவசாயத்தைப் பெருக்குவது போன்ற ஆக்கபூர்வ செயலுக்கு பயன் படுத்தலாம் வந்தே மாதரம்


krishnamurthy
ஏப் 25, 2024 19:01

சபாஷ்


ganapathy
ஏப் 25, 2024 17:49

இதே தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதி ஜரிக்கு கொடுப்பாரா


Indhuindian
ஏப் 25, 2024 17:40

இந்த நூறு கோடி வெறும் ட்ரைலர் தான் மெயின் பிக்ச்சர் பல ஆயிரம் கொடியிலே ஓடும்


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ