மேலும் செய்திகள்
பெண்ணை கர்ப்பமாக்கி மாயமான வாலிபர் கைது
14-Dec-2025
சிமென்ட் ஆலையில் ரெய்டு நிறைவு
12-Dec-2025
காரில் பதுக்கி சரக்கு விற்ற திருச்சி போலீஸ்காரர் கைது
07-Dec-2025 | 1
திருச்சி:திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே விடத்திலாம்பட்டியை சேர்ந்த இளங்கோ - ராசாத்தி தம்பதிக்கு, 9 வயது மகள், 7 வயது மகன் உள்ளனர். பட்டியலினத்தை சேர்ந்த இவர்கள் வீட்டருகே, மாற்று சமூகத்தை சேர்ந்த வடிவேல் - அழகுமணி ஆகியோர் வசிக்கின்றனர்.சமூக வேறுபாடு காரணமாக இரு குடும்பத்தினர் இடையே ஏற்கனவே தகராறு உள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு, 5ம் தேதி, வடிவேலுவின், 12 வயது மகன், இளங்கோவின், 7 வயது மகன் மீது சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. புகாரின்படி, மணப்பாறை போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில், வடிவேல், அழகுமணி, அவர்களின் மூன்று குழந்தைகள் மீது வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்த புகார் அடிப்படையில், நேற்று முன்தினம் தேசிய எஸ்.சி., - எஸ்.டி., ஆணைய இயக்குனர் டாக்டர் ரவிவர்மன், பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார்.அப்போது, திருச்சி துணை கலெக்டர் மிருணாளினி, மணப்பாறை டி.எஸ்.பி., ராமநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
14-Dec-2025
12-Dec-2025
07-Dec-2025 | 1