உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / மதுரை வீரன் சுவாமி சிலை காவிரியாற்றில் கண்டெடுப்பு

மதுரை வீரன் சுவாமி சிலை காவிரியாற்றில் கண்டெடுப்பு

கோட்டை: திருச்சி, சத்திரம் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் வழியில் உள்ள காவிரி ஆற்றின் பாலம் அருகே, நேற்று காலை, பாதி மூழ்கிய நிலையில் மதுரைவீரன் சுவாமி கற்சிலை கிடந்து உள்ளது.இதை பார்த்த பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள், சிலையை மீட்டபோது, சிலையின் இடது பக்கம் கை உடைந்த நிலையில் இருந்துள்ளது. அந்த சிலை, திருச்சி கிழக்கு தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. சிலை அண்மையில் செய்யப்பட்டதா, பழங்கால சிலையா என, தொல்பொருள் ஆய்வாளர்கள் வாயிலாக கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை