உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / 45 சவரன் பறித்து தப்பிய நபருக்கு வலை

45 சவரன் பறித்து தப்பிய நபருக்கு வலை

திருச்சி:திருச்சி கவிபாரதி நகரில் வசிப்பவர் பிரேமா, 53. கணவர் மனோகரன் போலீஸ் துறையில் போக்குவரத்து இன்ஸ்பெக்டராக பணியாற்றி, கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் இறந்தார். பிரேமா தன் மகன், திருமணம் ஆகி கணவரை பிரிந்து வாழும் நளினி, 36, ஆகியோருடன் வசித்து வருகிறார். சிங்கம்புணரியில் தன் கணவர் வேலை பார்த்தபோது, தேவமணிகண்டன் என்பவர் குடும்ப நண்பராக அங்கு இருந்ததாக கூறப்படுகிறது.நேற்று முன்தினம் அதிகாலை தேவமணிகண்டன் அவரது டிரைவர் மலைச்சாமி ஆகியோர், காரில் திருச்சி வந்தனர். வீட்டிற்குள் நுழைந்து 45 சவரன், 50,000 ரூபாய், வீட்டு பத்திரம் ஆகியவற்றை பறித்து தப்பினார். இதுகுறித்து பிரேமா கே.கே.நகர் போலீசில் அளித்த புகாரின் படி, போலீசார் தேவமணிகண்டன், மலைச்சாமியை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !