உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / டிச., வரை வெங்காயம் விலை உயராது

டிச., வரை வெங்காயம் விலை உயராது

திருச்சி:வரத்து அதிகம் உள்ளதால், டிசம்பர் வரை வெங்காயம் விலை உயராது என்கின்றனர் வியாபாரிகள். திருச்சி வெங்காய மண்டிக்கு தினமும், 1,100 டன் சின்ன, பெரிய வெங்காயம் வருகின்றன. தேவை குறைவாக இருப்பதால், தினமும், 200 டன் வெங்காயம் தேக்கமடைகிறது. அதை மறுநாள் விற்கும் போது, குறைந்த விலைக்கு தான் விற்க முடிகிறது. இதனால், விவசாயிகளுக்கு லாபம் குறைகிறது. சில நேரங்களில் நஷ்டமடையும் சூழலும் ஏற்படுகிறது. திருச்சி, வெங்காய தரகு மண்டி வர்த்தக சங்க செயலர் தங்கராஜ் கூறுகையில், ''தற்போது வெங்காய சீசன் என்பதால், வரத்து அதிகம் உள்ளது. இதனால் விலை குறைந்துள்ளது. ஏற்றுமதி செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். ஏற்றுமதி வரி, அனுப்பப்படும் நாடுகளில் இறக்குமதி வரி கட்டுவதால் சிக்கல் உள்ளது. வரியை அரசு நீக்கினால் அல்லது குறைத்தால் ஏற்றுமதி அதிகரிக்கும். இன்னும் சில மாதங்களுக்கு வெங்காயம் வரத்து இருக்கும் என்பதால், டிசம்பர் வரை விலை உயர வாய்ப்பில்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை