உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அகற்றிய மாணவர்கள்

சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அகற்றிய மாணவர்கள்

திருச்சி : முசிறி அருகே பலத்த மழைக்கு சாலையில் விழுந்த மரத்தை, தேர்வு எழுத சென்ற மாணவ - மாணவியர், பொதுமக்கள் உதவியுடன் அகற்றி, போக்குவரத்தை சீரமைத்தனர்.திருச்சி மாவட்டம், ஸ்ரீராமசமுத்திரம் பகுதியில், நேற்று முன்தினம் இரவு, காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில், அங்காளம்மன் கோவில் அருகே இருந்த வேப்ப மரம், சாலையின் குறுக்கே முறிந்து விழுந்தது.நேற்று காலை, நாமக்கல் மாவட்டம், மோகனுாரில் இருந்து, ஸ்ரீராமசமுத்திரம் வழியாக காட்டுப்புத்துாருக்கு அரசு பஸ் சென்றது. அதில், தேர்வுக்கு புறப்பட்ட பள்ளி மாணவ - மாணவியர் இருந்தனர். சாலையின் குறுக்கே மரம் கிடந்ததால், அப்பகுதியை கடக்க முடியாமல் தவித்தனர். உடனே, அவர்கள், பொதுமக்களுடன் சேர்ந்து மரத்தை வெட்டி அகற்றினர். உரிய நேரத்தில், தேர்வுக்கு செல்ல உதவிய மக்களுக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்து, பஸ்சில் ஏறி பள்ளி சென்றனர்.நெடுஞ்சாலைத் துறையினரின் உதவிக்கு காத்திருக்காமல், பொதுமக்கள் உதவியுடன் மாணவ - மாணவியரே மரத்தை அப்புறப்படுத்தியதை சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டினர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை