உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / போலீஸ்காரரை தாக்கிய மூவர் கைது

போலீஸ்காரரை தாக்கிய மூவர் கைது

திருச்சி: திருச்சி அருகே ரோந்து சென்ற போலீஸ்காரரை தாக்கி, கொலைமிரட்டல் விடுத்த மூவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் போலீஸ் ஸ்டேஷனில் போலீசாக பணியாற்றி வருபவர் வீரமணி, 29. இவர் நேற்று முன்தினம் இரவுப்பணியில் இருந்தபோது, வேங்கூர் சாலையில் ரோந்து சென்றார். அப்போது, மாதாகோவில் தெருவை சேர்ந்த தினேஷ், 33, பிரபு, 31, அஜித்குமார், 27, ஆகிய மூவரும், சாலையில் நின்று சந்தேகப்படும்படியாக பேசி கொண்டு இருந்தனர். அவர்களிடம், இரவில் இங்கு என்ன செய்கிறீர்கள் என போலீஸ்காரர் வீரமணி கேட்க, போதையில் இருந்த மூவரும், வீரமணியை திட்டி, அவரை கையால் தாக்கி உள்ளனர். இதுகுறித்து அவர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீசாருக்கும் மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து வீரமணியை தாக்கிய, பிரபு, அஜீத்குமார், தினேஷ் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ