உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / அனுமதியின்றி சேவல் சண்டை மூவர் கைது

அனுமதியின்றி சேவல் சண்டை மூவர் கைது

திருச்சி: வையம்பட்டி அருகே அனுமதியின்றி சேவல் சண்டையில் ஈடுபட்ட மூவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே உள்ள செட்டியப்பட்டியில் சேவல் சண்டை நடப்பதாக, நேற்று முன்தினம் மாலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வையம்பட்டி போலீசார் அப்பகுதிக்கு சென்றபோது, அங்குள்ள காட்டுப்பகுதியில் சேவல் சண்டையில் பலர் ஈடுபட்டிருந்தனர். போலீசாரைக் கண்டதும் கூட்டம் கலைந்து ஓடிவிட்டது. இதில் சேவல் சண்டையில் ஈடுபட்ட கரூர் பிரபாகரன், 28, கண்ணுசாமி, 33, ராஜபாண்டி, 30, ஆகிய மூவரை விரட்டிப் பிடித்த போலீசார், அவர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும், அவர்கள் வைத்திருந்த சண்டை சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை