அலுவலகத்தில் இறந்து கிடந்த கருவூல அலுவலர்
திருச்சி:மணப்பாறை துணை கருவூல அலுவலர், அலுவலகத்திலேயே இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள துணை கருவூல அலுவலகத்தில் அலுவலராக பணியாற்றி வந்தவர், சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த செந்தில்குமார், 51. இவர் பெரும்பாலான நாட்கள் அலுவலகத்திலேயே தங்கி விடுவார். இந்நிலையில் நேற்று முன்தினமும் அலுவலகத்தில் தங்கிய அவர், நேற்று காலை நீண்ட நேரமாகியும் அலுவலகத்தை திறக்காமல் இருந்துள்ளார். தகவலறிந்த மணப்பாறை போலீசார், பூட்டை உடைத்து அலுவலகத்தை திறந்து பார்த்தபோது, கட்டிலில் செந்தில்குமார் இறந்து கிடந்தார். அவரது உடலை மீட்ட போலீசார், செந்தில் குமார் இறந்தது குறித்து விசாரிக்கின்றனர்.