உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / ஆட்டோ- டிராக்டர் மோதல்; ஒருவர் பலி

ஆட்டோ- டிராக்டர் மோதல்; ஒருவர் பலி

மணப்பாறை: மணப்பாறையில் ஆட்டோ மீது டிராக்டர் மோதியதில் ஆட்டோ டிரைவர் பலியானார். மணப்பாறை, கல்லாத்துப்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(40). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் (17ம் தேதி) இரவு எட்டு மணிக்கு கல்லாத்துப்பட்டியில் இருந்து பஸ்ஸ்டாண்டிற்கு ஆட்டோவை எடுத்துக்கொண்டு வந்துள்ளார். ஐ.பி.பி., பெட்ரோல் பங்க் அருகே வரும்போது முன்னால் விறகு ஏற்றிச்சென்ற டிராக்டரை முந்த முயன்றுள்ளார்.அப்போது, எதிர்பாராத விதமாக ஆட்டோ டிராக்டரின் சக்கரத்தில் மோதியதால் ஆட்டோ மீது டிராக்டர் மீது ஏறியது. இதில் படுகாயமடைந்த சுப்பிரமணி, மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இறந்தார். இச்சம்பவம் குறித்து எஸ்.ஐ., அரங்கநாதன், எஸ்.எஸ்.ஐ., ஜீவன்குமார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !