| ADDED : ஜூலை 25, 2011 01:54 AM
திருச்சி: திருச்சியில் ரோந்து சென்ற பெண் எஸ்.ஐ.யை ம.தி.மு.க., பிரமுகர் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி கோட்டை போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., இந்திரா நே ற்று முன்தினம் இரவு மலைக்கோட்டை என்.எஸ்.பி., ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். வாகனத் தணிக்கை செ ய்து கொண்டிருந்த போது, ஒருவர் குடிபோதையில் தள்ளாடியபடி வந்தார். எஸ்.ஐ., இந்திரா அவரை எச்சரித்து அனுப்பினார். அப்போது, அவ்வழியாக வந்த ம.தி.மு.க., பிரமுகர் கணேசன் என்பவர் எஸ்.ஐ., இந்திராவை பார்த்து, 'நீங்கள் எப்படி எனது ஆதரவாளரை கண்டிக்கலாம்' என்று மிரட்டும் தொணியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.அதற்கு எஸ்.ஐ., இந்திரா, 'நீங்களும் குடிபோதையில் உள்ளீர்கள். ஒழுங்காக வீடுபோய் சேருங்கள்' என்றார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, ஒரு கட்டத்தில் கணேசன் எஸ்.ஐ.,யை மிரட்டியதாக தெரிகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இந்திரா கொடுத்த புகாரின் பேரில், எஸ்.ஐ.,யை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கணேசன் மீது கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.