| ADDED : செப் 03, 2011 12:27 AM
திருச்சி: தமிழகத்தில் அரசு கேபிள் 'டிவி' துவக்கியதுக்கு முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.தென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் வசிக்கும் கோடிக்கணக்கான நுகர்வோர் பயன்பெறும் வகையில், 70 ரூபாய்க்கு கேபிள் இணைப்பு கிடைக்கும் வகையில் அரசு கேபிள் துவங்கியுள்ளதால், அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறுவர். தற்போது கேபிள் இணைப்புக்கு 250 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. அரசு கேபிள் ஒளிபரப்பால், இனி பொதுமக்கள் கேபிள் கட்டணம் 70 ரூபாய் செலுத்தினால் போதும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாதம் ஒன்றுக்கு மக்களுக்கு 180 ரூபாய் மிச்சமாகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இந்த நடவடிக்கையை தென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் பாராட்டி வரவேற்கிறது. அதேபோல், டிஸ்கவரி சேனல், ராஜ் 'டிவி', விஜய் 'டிவி' உள்ளிட்ட சில 'டிவி'களையும் இலவச சேனல்களாக மக்களுக்கு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.