உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / முதல்வர் பிரச்சாரத்துக்கு திரளாக வரவேண்டும்: அமைச்சர்

முதல்வர் பிரச்சாரத்துக்கு திரளாக வரவேண்டும்: அமைச்சர்

திருச்சி: திருச்சியில் கால்நடைத்துறை அமைச்சர் சிவபதி வெளியிட்ட அறிக்கை:திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பரஞ்ஜோதி, மாநகராட்சி மேயர் வேட்பாளர் ஜெயா மற்றும் மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய, தமிழக முதல்வரும், கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இன்று மாலை பிரச்சாரம் செய்ய திருச்சி வருகிறார்.முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் மாவட்ட செயலாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட கட்சி நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், தொகுதி பொறுப்பாளர்கள், ஜெ., பேரவை, எம்.ஜி.ஆர்., மன்றம், இளைஞரணி, மகளிரணி, மாணவரணி, வக்கீல் அணி, சிறுபான்மை பிரிவு, விவசாய பிரிவு, மீனவர் அணி, இலக்கிய அணி, இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை நிர்வாகிகளும், கட்சியினரும் பெரும்திரளாக முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்கவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ