உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / சர்ச்சில் கூரை அமைத்த இருவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

சர்ச்சில் கூரை அமைத்த இருவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

திருச்சி:சர்ச்சில் கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர். திருச்சி, பிராட்டியூரில் உள்ள சர்ச்சில், நடராஜ் என்பவர் மேற்பார்வையில், நேற்று பிற்பகல் மூன்று பேர் தகரத்தாலான மேற்கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். உயரமான நகரும் ஏணியில் ஏறி, தகர கூரையை பொருத்திக் கொண்டிருந்த போது, ஏணி வேகமாக நகர்ந்து அருகில் இருந்த உயர் அழுத்த மின் கம்பியில் மோதியது.அதில், ஏணியின் மேலே நின்று, தகரத்தை கையில் வைத்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம், தன்னாங்குடி கிராமத்தை சேர்ந்த வெள்ளைச்சாமி, தர்மபுரியைச் சேர்ந்த பாக்யராஜ் ஆகிய இருவரும் மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர்.ஏணியை பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரை சேர்ந்த சிவக்குமார் பலத்த காயத்துடன், திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருச்சி செஷன்ஸ் கோர்ட் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை