உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / பஸ்சில் 23 சவரன் நகை திருடிய 5 பேருக்கு கம்பி

பஸ்சில் 23 சவரன் நகை திருடிய 5 பேருக்கு கம்பி

திருச்சி:திருச்சி, மலைக்கோட்டை பகுதி சஞ்சீவி நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் சசிகுமார். இவர், கடந்த சனிக்கிழமை தன் குடும்பத்தினருடன், டிராவல் பேக்கில், 23 சவரன் நகையை எடுத்துக் கொண்டு, வெளியூர் செல்ல, மத்திய பஸ் ஸ்டாண்ட்டுக்கு டவுன் பஸ்சில் சென்றார். பாலக்கரை பகுதியில் சென்றபோது, சசிகுமாரின் டிராவல் பேக்கை மர்ம நபர் திருடியது தெரிந்தது. இதுகுறித்து சசிகுமார், புகாரின்படி, பாலக்கரை போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ராஜா, 42, தென்னுாரைச் சேர்ந்த சூசைராஜ், 34, யாசர் அராபத், 29, அரியமங்கலத்தைச் சேர்ந்த சேக் தாவூத், 38, பீமநகரைச் சேர்ந்த அன்வர் சதக், 38, ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார், அவர்களை கைது செய்து நகைகளை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை