உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / பிறந்த 9 நாளில் குழந்தையை கொன்று பெற்றோர் ஓட்டம்

பிறந்த 9 நாளில் குழந்தையை கொன்று பெற்றோர் ஓட்டம்

வேலுார்:வேலுார் மாவட்டம், ஒடுகத்துார் அடுத்த பொம்மன்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு, 30. இவரது மனைவி டயானா. தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. மீண்டும் கர்ப்பமான டயானாவுக்கு கடந்த மாதம், 27ல் பெண் குழந்தை பிறந்தது. தம்பதி சேர்ந்து, பச்சிளம் குழந்தைக்கு பப்பாளி மரத்து பாலை ஊற்றி நேற்று முன்தினம் கொலை செய்தனர்.பின், தன் தந்தை சரவணனுக்கு போன் செய்து, குழந்தை பேச்சு, மூச்சின்றி கிடப்பதாக டயானா கூறினார்.அவர் வந்தபோது, முதல் குழந்தை போர்வையை எடுத்து போட்டதில் மூச்சுத்திணறி குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளார்.பின், தம்பதி சேர்ந்து, குழந்தை சடலத்தை வீட்டருகே புதைத்தனர்.வேப்பங்குப்பம் போலீசில், சரவணன் புகாரளிக்கவே, தம்பதியிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது, போலீஸ் ஸ்டேஷனில் இருந்து சேட்டு, டயானா மாயமாகினர். வீட்டை சுற்றி ஆய்வு செய்ததில், பப்பாளி மரம் வெட்டப்பட்டதும், பள்ளம் தோண்டி குழந்தை புதைக்கப்பட்டதையும் உறுதி செய்தனர். குழந்தை சடலத்தை தோண்டி உடற்கூறு ஆய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். தலைமறைவான தம்பதியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ