மேலும் செய்திகள்
மின்சாரம் தாக்கி இருவர் அடுத்தடுத்து உயிரிழப்பு
16-Jun-2025
கே.வி.குப்பம்; கே.வி.குப்பம் அருகே, நாட்டு வெடிகுண்டை கடித்த நாய், வாய் கிழிந்து உயிரிழந்தது. வேலுார் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த தேவரிஷிகுப்பத்தை சேர்ந்தவர் விவசாயி தன்ராஜ், 50. நேற்று முன்தினம் நள்ளிரவில், வீட்டில் வளர்த்து வரும் நாயின் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தார். அப்போது நாய் வாய் கிழிந்து, ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தது.புகாரில், கே.வி.குப்பம் போலீசார் விசாரித்தனர். இதில், பன்றிகளுக்கு வைக்கப்படும் நாட்டு வெடிகுண்டை, நாய் கடித்து உயிரிழந்தது தெரிந்தது. நாட்டு வெடிகுண்டை வைத்தவர்கள் யார் என, போலீசார் விசாரிக்கின்றனர்.
16-Jun-2025