உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / அரிவாளுடன் மிரட்டிய பஞ்., தலைவரின் கணவர்

அரிவாளுடன் மிரட்டிய பஞ்., தலைவரின் கணவர்

குடியாத்தம்:வேலுார் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, செட்டிக்குப்பம் பஞ்., தலைவராக இந்திரா உள்ளார். கடந்த, 2ம் தேதி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கிராம சபை கூட்டம் நடந்தது. அப்போது, அதே கிராமத்தைச் சிலர் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரும்படி பஞ்., தலைவரிடம் கேட்டனர். அப்போது அங்கிருந்த பஞ்., தலைவரின் கணவரான ரவிச்சந்திரனுக்கும், அவர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன், நேற்று முன்தினம் அடிப்படை வசதி கேட்டவர்களின் வீடுகளின் முன் அரிவாளுடன் சென்று, 'அடிப்படை வசதிகளை கேட்டால் கொலை செய்து விடுவேன்' என மிரட்டினார். இதுகுறித்து குடியாத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ