உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் /  பெண் சிசு சாக்கடையில் வீச்சு போலீஸ் தீவிர விசாரணை

 பெண் சிசு சாக்கடையில் வீச்சு போலீஸ் தீவிர விசாரணை

வேலுார்: வேலுார், கொசப்பேட்டையில் அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை உள்ளது. இங்கு, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டங்களில் இருந்து ஏராளமான கர்ப்பிணியர் பிரசவத்திற்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்று காலை பென்ட்லேண்ட் மருத்துவமனைக்கு வெளியே உள்ள சாக்கடையில், பிறந்து சில மணி நேரங்களே ஆன, பெண் சிசுவின் உடல் மிதந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள், வேலுார் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் கூறுகையில், 'பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில், ஐந்து நாட்களுக்குள் பிறந்த குழந்தைகளின் விபரங்களை சேகரித்து, விசாரிக்கிறோம்' என்றனர். மேலும், அந்த சிசு பிறந்து, சாக்கடையில் வீசப்பட்டதால், இறந்ததா அல்லது இறந்தே பிறந்ததா எனவும் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்