மேலும் செய்திகள்
அரசு ஊழியர் வீட்டில் 15 சவரன் நகை திருட்டு
02-Oct-2025
போதை மாத்திரை வழக்கில் 4 பேர் சிக்கினர்
02-Oct-2025
ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் இந்தாண்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் 2,75,000 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு உள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி 05-06-2024 வேலூரில் நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் மாநகராட்சி ஆணையர் திருமதி. ஜானகி ரவீந்திரன் அவர்கள் பங்கேற்று இந்நிகழ்வை தொடங்கி வைத்தார்.சுற்றுச்சூழலுடன் சேர்த்து விவசாயிகளின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் விதமாக மரம் சார்ந்த விவசாய முறையை ஊக்குவிக்கும் பணியில் காவேரி கூக்குரல் இயக்கம் மிக தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. தமிழ்நாட்டில் இவ்வியக்கம் மூலம் இந்தாண்டு (24-25 நிதியாண்டில்) 1.21 கோடி மரங்கள் விவசாய நிலங்களில் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்டம் தோறும் இதன் தொடக்க விழாக்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன.அந்த வகையில் வேலூரில் உள்ள முத்தண்ணா நகர் ரெசிடன்ட்ஸ் வெல்பேர் அசோசியேசன் பூங்காவில் நடைப்பெற்ற இதன் தொடக்க விழாவில் மாநகராட்சி ஆணையர் திருமதி. ஜானகி ரவீந்திரன் அவர்கள் மரக்கன்றை நட்டு இந்நிகழ்வை தொடங்கி வைத்தார். மேலும் மாவட்ட வனத்துறை அதிகாரி திரு.வி.குருசாமி, கவுன்சிலர் திருமதி. தவமணி தாமோதரன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவ்வியக்கம் மூலம் கடந்தாண்டு வேலூர் மாவட்டத்தில் மட்டும் 2,58,576 மரங்களும், தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 10 லட்சம் மரங்களும் விவசாய நிலங்களில் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
02-Oct-2025
02-Oct-2025