மேலும் செய்திகள்
காளை முட்டி இன்ஸ்., உட்பட 10 பேர் காயம்
19-Jan-2026
தந்தையை கொன்ற மகன் கைது
18-Jan-2026
கல்லுாரி மாணவன் கொலை; தேடப்பட்ட நண்பர் சரண்
06-Jan-2026
வேலூர்: வேலூர் அருகே நடந்த சாலை விபத்தில், கல்லூரி மாணவர் உள்ளிட்ட இருவர் பலியாகினர்.வேலூர் அடுத்த அன்பூண்டியை சேர்ந்தவர் சுந்தரம். இவர் டீ கடை நடத்தி வந்தார். இவர் நேற்று முன் தினம் இரவு, 10 மணிக்கு அப்துல்லாபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.ஜோலார்பேட்டை அடுத்த கோடியூரை சேர்ந்தவர் பாரூக் (25). இவர் பெங்களூருவில் பி.இ., படித்து வந்தார். இவரும், இவரது நண்பர் அரவிந்தனும் (24) பைக்கில் வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.அப்துல்லாபுரம் அருகே வந்த போது, ரோட்டில் நடந்து சென்ற சுந்தரம் மீது பாரூக் வந்த பைக் மோதியது. இதில், பாரூக், சுந்தரம் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த அரவிந்தன் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். வேலூர் தாலுகா போலீஸார் விசாரிக்கின்றனர்.
19-Jan-2026
18-Jan-2026
06-Jan-2026