பெண்ணை பலாத்காரம் செய்து ஐந்தரை சவரன் கொள்ளை
பேரணாம்பட்டு:பேரணாம்பட்டு அருகே, வீட்டிலிருந்த பெண்ணை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்து, ஐந்தரை சவரன் நகையை மர்ம நபர் கொள்ளையடித்து சென்றுள்ளார்.வேலுார் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த ஏரிகுத்தி கிராமத்தை சேர்ந்த மளிகை கடை வியாபாரியின், 30 வயது மனைவி, நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்தார். இரவு, 11:00 மணியளவில் அடையாளம் தெரியாத நபர், வீட்டினுள் புகுந்து, கூர்மையான ஆயுதத்தால் அவரை தாக்கி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவர் அணிந்திருந்த ஐந்தரை சவரன் நகையை பறித்து தப்பினார். பாதிக்கப்பட்ட பெண் அலறி கூச்சலிட்டதால், அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பேரணாம்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.