உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டம்பொன்முடி தலைமையில் ஊர்வலம்

காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டம்பொன்முடி தலைமையில் ஊர்வலம்

விழுப்புரம்:விழுப்புரத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா பல்வேறு கட்சிகள் சார்பில் கொண்டாடப்பட்டது.தி.மு.க., சார்பில் மாவட்ட செயலாளர் பொன்முடி தலைமையில் ஊர்வலமாக சென்று விழுப்புரம் திரு.வி.க., வீதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலையணிவித்தனர். மாவட்ட பொருளாளர் புகழேந்தி, துணை செயலாளர் புஷ்பராஜ், நகராட்சி சேர்மன் ஜனகராஜ், காணை சேர்மன் கல்பட்டு ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.தே.மு.தி.க., சார்பில் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் எம்.எல்.ஏ., தலைமையில் அக்கட்சியினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.காங்., சார்பில் காமராஜர் சிலைக்கு நகர தலைவர் குலாம்மொய்தீன் மாலையணிவித்தார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் செல்வராஜ், தயானந்தம், துணை தலைவர் ராமதாஸ், லோக்சபா தொகுதி இளைஞர் காங்., தலைவர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழுப்புரம் நாடார்கள் சங்கம் சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை