உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

வானுார் : கிளியனுார் அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கிளியனுார் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். தேற்குணம் பஸ் நிறுத்தம் அருகே அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்ததில் 40 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.விசாரணையில், தேற்குணம் வீரன் கோவில் தெருவைச் சேர்ந்த யோகேஷ், 20; அதே பகுதியைச் சேர்ந்த தமிழரசன், 22; என தெரிந்தது. உடன் கஞ்சா, பைக்கை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ