உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

வானுார் : புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் மீனா தலைமையில் நேற்று முன்தினம் இரவு தொந்தாமூர் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி அவர்கள் வைத்திருந்த சாக்கு பையை சோதனை செய்தனர். அதில், 60 குவாட்டர் பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.விசாரணையில், காஞ்சிபுரம் மாவட்டம், அய்யங்கார் குளம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சந்தோஷ்குமார் மகன் சார்லஸ் பிரபாகரன், 19; பாண்டுரங்கன் மகன் கிேஷார், 23; என்பதும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உறவினரின் விசேஷத்திற்காக புதுச்சேரி, லிங்காரெட்டிப்பாளையத்தில் இருந்து மது பாட்டில்கள் வாங்கிச் சென்றது தெரியவந்தது.அதனைத் தொடர்ந்து இருவர் மீதும் வழக்குப் பதிந்து, கைது செய்து, மதுபாட்டில்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !