உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / புதுச்சேரி மதுபாட்டில் கடத்திய 2 பேர் கைது

புதுச்சேரி மதுபாட்டில் கடத்திய 2 பேர் கைது

வானுார், : கிளியனுார் அருகே மதுபாட்டில் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கிளியனுார் போலீசார் நேற்று முன்தினம் இரவு தைலாபுரத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்ததில், 50 புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் சந்தோஷ்குமார், 23; சின்னசாமி மகன் தங்கராஜ், 21; என்பது தெரியவந்தது.போலீசார் வழக்கு பதிந்து 2 பேரையும் கைது செய்து, மதுபாட்டில்கள் மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ