உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குட்கா கடத்திய 2 பேர் கைது

குட்கா கடத்திய 2 பேர் கைது

கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் அருகே காரில் குட்கா பொருட்களை கடத்திச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கண்டாச்சிபுரம் அடுத்த மழவந்தாங்கல் ஊராட்சி எல்லையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நேற்று காலை 6:00 மணி அளவில் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பெங்களூருவில் இருந்து கடலுார் நோக்கிக் சென்ற மகிந்திரா காரை சோதனை செய்தனர். அதில் குட்கா பாக்கெட்டுகள் கடத்திச் சென்றது தெரியவந்தது. உடன் பெங்களூரு, பெசன்குடியைச் சேர்ந்த அப்துல் நபி மகன் ஷபியுல்லா, 38; அயூப் மகன் ஆசாப், 24; ஆகிய இருவரையும் கைது செய்து, கார் மற்றும் 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி