உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சாராய வியாபாரிகள் 2 பேர் தடுப்பு காவலில் கைது

சாராய வியாபாரிகள் 2 பேர் தடுப்பு காவலில் கைது

விழுப்புரம்: திண்டிவனம் அருகே தொடர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த சாராய வியாபாரி தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.திண்டிவனம் அடுத்த ரெட்டணை குளக்கரை தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் சிவா, 29; இவர், அந்த பகுதியில் கள்ளச்சாரயம் விற்று வருகிறார். கடந்த மாதம் 1ம் தேதி, பெரியதச்சூர் போலீசார் ரோந்து சென்றபோது, சிவா வீட்டின் அருகே சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்தபோது, அவரை வழக்குப்பதிந்து கைது செய்தனர்.இவரது தொடர் நடவடிக்கையை தடுக்கும் வகையில், தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ், கைது செய்ய எஸ்.பி., தீபக்சிவாச் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில், கலெக்டர் பழனி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனையடுத்து, பெரியதச்சூர் போலீசார் நேற்று சிவாவை, தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து, அதற்கான ஆணையை கடலுார் மத்திய சிறையில் உள்ள சிவாவிடம் அளித்தனர்.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம் அடுத்த வீரபயங்கரம் கிராமத்தைச் சேர்ந்த குமாரசாமி, 50;இவர், கூகையூர் ஆற்றுப்பாலம் அருகே கள்ளச்சாராயம் விற்ற போது கீழ்குப்பம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது சாராய வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரது செயலை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., ரஜத் சதுர்வேதி பரிந்துரையின் பேரில், கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த், குற்றவாளி குமாரசாமியை தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து கடலுார் மத்திய சிறையில் உள்ள அவரிடம் அதற்கான ஆணை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை