உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தம்பதியை தாக்கிய 2 பேர் கைது

தம்பதியை தாக்கிய 2 பேர் கைது

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஆமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார், 32; அதே பகுதியைச் சேர்ந்தவர் அமுதா. இருவரது குடும்பத்திற்கும் இடையே வீட்டின் முன் கழிவுநீர் செல்வது தொடர்பாக முன்விரோதம் உள்ளது.கடந்த 4ம் தேதி அய்யனார் வீட்டின் கழிவுநீர் அமுதா வீட்டின் வாசல் வழியாக ஓடியது. இதனால், அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.அப்போது அமுதா, அபிசந்திரன், விஜயலட்சுமி, ஆனந்தன் ஆகிய 4 பேர் சேர்ந்து அய்யனாரின் தந்தை சுப்ரமணி தாய் அஞ்சலை ஆகிய இருவரையும் தாக்கினர்.அய்யனார் அளித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் அழுதா, அபிசந்திரன், விஜயலட்சுமி, ஆனந்தன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிந்து வேலு மகன்கள் அபிசந்திரன், 25; ஆனந்தன், 27; ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ