உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முன்விரோத தகராறு 2 பேர் கைது

முன்விரோத தகராறு 2 பேர் கைது

அவலுார்பேட்டை : மேல்மலையனுாரில் முன்விரோத தகராறில் ஒருவரைத் தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.வளத்தி அடுத்த சாத்தப் புத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம், 44; அதே ஊரைச் சேர்ந்தவர்கள் வெங்கடேசன், 40; முருகன், 45; ஏழுமலை, 40; அர்ஜூனன், 45; இவர்களுக்குள் ஊர் கோவில் நிலத்தில் பட்டா வாங்குவது தொடர்பாக முன்விரோதம் இருந்தது.கடந்த 3ம் தேதி, மேல்மலையனுாரில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே ராமலிங்கம் வந்து கொண்டிருந்தபோது, வழிமறித்த வெங்கடேசன் உட்பட 4 பேரும் சேர்ந்து திட்டி, தாக்கினர்.இது குறித்து ராமலிங்கம் மனைவி விமலா, 34; அளித்த புகாரின் பேரில், வெங்கடேசன், அர்ஜூனன் உட்பட 4 பேர் மீதும் வளத்தி போலீசார் வழக்குப் பதிந்து முருகன், ஏழுமலை ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை