உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீட்டின் பூட்டை உடைத்து 22 சவரன் நகை கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து 22 சவரன் நகை கொள்ளை

செஞ்சி: செஞ்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 22 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.செஞ்சி அடுத்த செம்மேடு மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் ராஜபிரபு, 42; சென்னையில் தனியார் மருத்துவமனையில் மருந்தாளுனராக பணிபுரிந்து வருகிறார்.இவர், கடந்த 29ம் தேதி இரவு தனது மனைவி, தந்தை மற்றும் பிள்ளைகளுடன் கொடைக்கானல் மற்றும் பழனிக்கு சுற்றுலா சென்றார்.நேற்று காலை 11:30 மணிக்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த செயின், நெக்லஸ், மோதிரம் உள்ளிட்ட 22 சவரன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.புகாரின் பேரில் நல்லான்பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி