உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மின் கம்பியை மிதித்த 3 பசு மாடுகள் பலி

மின் கம்பியை மிதித்த 3 பசு மாடுகள் பலி

மரக்காணம் : மரக்காணம் அருகே உள்ள பிலாரிமேடு கிராமத்தில் அருந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 3 பசு மாடுகள் மின்சாரம் தாக்கி இறந்தன.மரக்காணம் அடுத்த கந்தாடு ஊராட்சியில் உள்ள பிலாரிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வநாயகம்,60; விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் அழகேசன்,55. இவர்கள் தங்களது பசுமாடுகளை நேற்று காலை வழக்கம்போல் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றனர். அருகிலுள்ள வயல்வெளியில் மின் கம்பி அருந்து கிடந்தது. இதனை மிதித்த தெய்வநாயகத்தின் இரண்டு பசு மாடுகள், அழகேசனின் ஒரு பசு மாடு மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தன. அப்பகுதி பொதுமக்கள் மரக்காணம் மின்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின் அப்பகுதியில் மின்சாரத்தை துண்டிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து வருவாய்த்துறை கால்நடைத்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்