மேலும் செய்திகள்
நாளை மின்தடை
7 hour(s) ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
7 hour(s) ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
7 hour(s) ago
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
7 hour(s) ago
மரக்காணம்:மரக்காணம் அடுத்த கீழ்புத்துப்பட்டு பட்டாசு தயாரிப்பு கூடத்தில் ஏற்பட்ட விபத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் இரு பெண்கள் உட்பட மூவர் படுகாயமடைந்தனர்.விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த கீழ்புத்துப்பட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன்,55; இவர், உரிமம் பெற்று கடந்த 25 ஆண்டாக மஞ்சனீஸ்வரர் கோவில் அருகே பட்டாசு தயாரித்து வருகிறார்.நேற்று மதியம் 12:30 மணிக்கு பட்டாசு குடோன் அருகே உள்ள தென்னை மர நிழலில் ராஜேந்திரன், கொழுவாரியை சேர்ந்த பெருமாள் மனைவி கவுரி,65; பாண்டுரங்கன் மனைவி ஆண்டாள், 47; ஆகியோர், பட்டாசு தயாரித்து வெயிலில் உலர வைத்து கொண்டிருந்தனர்.அப்போது, ராஜேந்திரன் தயாரித்த பட்டாசு திடீரென தீ பிடித்ததால் பதற்றத்தில் அந்த பட்டாசை துாக்கியெறிந்தார். அது அருகில் உலர வைத்திருந்த பட்டாசுகள் மீது விழுந்ததில் நுாற்றுக்கும் மேற்பட்ட பட்டாசுகள் வெடித்து சிதறியது.உடன், ராஜேந்திரன் உள்ளிட்ட மூவரும் அலறியடித்து ஓடினர். அப்போது, பட்டாசு தயாரிக்க வைத்திருந்த வெடி மருந்து பக்கம் ராஜேந்திரன் ஓடிய போது வெடிமருந்தும் தீப்பிடித்தது. ராஜேந்திரன் மீது தீப்பற்றியதும் அருகில் உள்ள குட்டை நீரில் விழுந்தார். கவுரியும், ஆண்டாளும் தீ காயங்களுடன் பதறியடித்து ஓடினர்.மரக்காணம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். கோட்டக்குப்பம் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, தீ விபத்தில் சிக்கிய ராஜேந்திரனை சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையிலும், ஆண்டாளை பிம்ஸ் மருத்துவமனையிலும், கவுரியை ஜிப்மர் மருத்துவமனையிலும் சேர்த்தனர். மேலும், விபத்து குறித்த வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பட்டாசு குடோனில் தயாரிக்காமல் வெட்ட வெளியில் தயாரித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் குடோனில் இருந்த பட்டாசுகள் விபத்தில் இருந்து தப்பியது. மேலும் இவர்கள் தயாரித்த பட்டாசுகள் வெடிக்கும் திறன் குறைந்த அவுட் வகையை சேர்ந்தது என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் ஆலை வளாகத்தில் இருந்த தென்னை மற்றும் மா மரங்கள் தீயில் கருகின.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago