உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாணவரை தாக்கிய 5 பேர் கைது

மாணவரை தாக்கிய 5 பேர் கைது

வானுார்: வானுார் அடுத்த திருவக்கரை காலனி மற்றும் திரவுபதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 17 வயது சிறுவர்கள் 2 பேர் பிளஸ் 2 படித்து வருகின்றனர். இருவருக்குமிடையே பள்ளிக்கு பஸ்சில் சென்றபோது படிக்கட்டில் நின்று செல்வது தகராறு ஏற்பட்டது.இந்நிலையில், தழுதாளியைச் சேர்ந்த மாணவரை, திருக்கரை காலனியைச் சேர்ந்த மாணவர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.புகாரின் பேரில், ஜனகராஜ் மகன் ராஜேஷ், 24; கங்காதுரை மகன் கரன், 18; ராமு மகன் ராம்குமார், 18; மற்றும் 17 வயது சிறுவர்கள் 2 பேர் உட்பட 5 பேரை கைது செய்து, மேலும் சிலரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை