உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / 8 ஏக்கர் கரும்பு நாசம்

8 ஏக்கர் கரும்பு நாசம்

கண்டமங்கலம்,:விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த ஆழியூர் கிராமத்தில் அறுவடை செய்யப்பட்ட கரும்புகளை நான்கு டிராக்டர் டிரெய்லரில் ஏற்றி ஆலைக்கு அனுப்ப தயாராகினர்.காலை, 11:30 மணிக்கு அப்பகுதியில் பலத்த சூரைக்காற்று வீசியது. இதில், அருகில் உள்ள லட்சுமி நாராயணன் என்பவருக்கு சொந்தமான அறுவடை செய்யப்பட்ட கரும்பு வயலில் சென்ற மின்கம்பிகள் உரசியதில் தீப்பொறி கொட்டியது.அதில், வயலில் காய்ந்து கிடந்த கரும்பு தோகைகள் தீப்பற்றி, மளமளவென தீ பரவியது. எட்டு ஏக்கர் கரும்பு வயல்கள் எரிந்து நாசமாகின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை