உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு

விழுப்புரம் : விழுப்புரம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது, போலீசார் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம் அடுத்த வளவனுார் புதுநகரைச் சேர்ந்தவர் பரசுராமன் மகன் அருள், 19; இவர், விழுப்புரம் அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை, கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்துகொண்டார்.இது குறித்து தகவல் அறிந்த கண்டமங்கலம் வட்டார சமூகநல விரிவாக்க அலுவலர் சண்முகவள்ளி அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார், அருள் மீது, குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை