உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மனைவியை துன்புறுத்திய கணவர் மீது வழக்கு

மனைவியை துன்புறுத்திய கணவர் மீது வழக்கு

விழுப்புரம், : விழுப்புரம் அருகே மனைவியை துன்புறுத்திய கணவர் மற்றும் மாமனார், மாமியார் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்விழுப்புரம் அடுத்த அயினம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா மகள் பைரவி, 21; இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்தார்.இவர், கடலுார் மாவட்டம், பண்ருட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் அஜித்குமார், 25; என்பவரை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.இருவரும் சென்னை, நீலாங்கரை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்தனர். இந்நிலையில், அஜித்குமார், தனது தந்தை கிருஷ்ணமூர்த்தி, தாய் கோமதி ஆகியோரின் பேச்சை கேட்டு கொண்டு பைரவியை தாக்கி துன்புறுத்தியுள்ளார்.இதுகுறித்து பைரவி அளித்த புகாரின் பேரில், அஜித்குமார், கிருஷ்ணமூர்த்தி, கோமதி ஆகிய 3 பேர் மீதும் விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை