உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெண்ணிற்கு மிரட்டல் வாலிபர் மீது வழக்கு

பெண்ணிற்கு மிரட்டல் வாலிபர் மீது வழக்கு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே போலீசில் புகாரளித்த பெண்ணை மிரட்டியவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். விழுப்புரம் ஒருகோடி கிராமத்தைச் சேர்ந்தவர் பரசுராமன் மகன் சரண்ராஜ், 28; இவர், அதே பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் கடந்த 4ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், சம்பவம் குறித்து போலீசில் புகாரளித்த, அந்த சிறுமியின் தாயிடம், சரண்ராஜின் அண்ணன் சத்தியராஜ், 30; நேற்று முன்தினம் நேரில் சென்று, திட்டி தகராறு செ ய்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில், காணை போலீசார் சத்தியராஜ் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ