| ADDED : மே 11, 2024 04:50 AM
தியாகதுருகம்: தியாகதுருகம் மவுண்ட் பார்க் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் உயர்ந்த மதிப்பெண் எடுத்து சிறப்பிடம் பெற்றுள்ளனர்.இப்பள்ளி மாணவி சாய்ஸ்ரீ 497 மதிப்பெண் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளார். இவர் தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் தலா 99 மதிப்பெண், கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களில் 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.மாணவர் கமல்ராஜ் 496, காவியா ஸ்ரீ 495 மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.கணக்கு பாடத்தில் 58, அறிவியல் பாடத்தில் 19, சமூக அறிவியலில் 6 என 83 பேர் 100க்கு100 மதிப்பெண் எடுத்துள்ளனர். 490 மதிப்பெண்ணுக்கு மேல் 14 பேர், 480க்கு மேல் 32 பேர், 470க்கு மேல் 59 பேர், 460க்கு மேல் 86 பேர், 450க்கு மேல் 110 பேர், 425க்கு மேல் 146 பேர், 400 க்கு மேல் 184 பேர், 350க்கு மேல் 231 பேர் சாதித்துள்ளனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தாளாளர் மணிமாறன் பரிசு வழங்கி பாராட்டினார். முதல்வர் கலைச்செல்வி, துணை முதல்வர் முத்துக் குமரன், பொறுப்பாசிரியர் மணிகண்டன் உடனிருந்தனர்.