உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தென்பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த குழு அமைக்க கோரிக்கை

தென்பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த குழு அமைக்க கோரிக்கை

செஞ்சி : தென்பெண்ணை-பாலாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த குழு அமைக்க வேண்டும் என நந்தன் கால்வாய் பாதுகாப்பு சங்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். செஞ்சி அடுத்த அனந்தபுரத்தில் நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கம் மற்றும் செஞ்சி ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.ஊராட்சி தலைவர்கள் சங்க தலைவர் ரவி தலைமை தாங்கினார். நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்க செயலாளர்கள் ரவிச்சந்திரன், ரமேஷ்பாபு, நிர்வாகிகள் சுரேஷ், ஸ்ரீதர், சம்பத் முன்னிலை வகித்தனர். தலைவர் அன்பழகன் வரவேற்றார். துணைச் செயலாளர் கார்த்திகேயன், ஒருங்கிணைப்பாளர் அறவாழி ஆகியோர் விளக்கி பேசினர். கூட்டத்தில் தென் பெண்ணை-பாலாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்த படி 309 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி நடப்பு ஆண்டில் 22 கிலோ மீட்டர் துார கால்வாய் வெட்டும் பணிகளை துவக்க வேண்டும். நந்தன் கால்வாய் வராக நதி பாசன பகுதியில் பயன்பாட்டில் உள்ள 58 ஏரிகளின் எண்ணிக்கையை 250 ஏரிகளாக விரிவுபடுத்தி ஆயக்கட்டை அதிகரிக்க வேண்டும். தென்பெண்ணை பாலாறு திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர ஓய்வு பெற்ற நீர்வளத்துறை அலுவலர்கள் கொண்ட குழுவை நியமித்து அதன் அறிக்கையை பெற்று திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றினர்.இதில் எக்ஸ்னோரா ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன், கரும்பு விவசாயிகள் அணி பொதுச் செயலாளர் சக்திவேல், நீர்நிலைகள் பாதுகாப்பு சங்க தலைவர் நெடுமாறன், சங்கீதமங்கலம் ஊராட்சி தலைவர் கோமதி குணசேகரன், ஒன்றிய கவுன்சிலர் நாகராஜன், ஒருங்கிணைப்பாளர் சங்கர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை