உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சுற்றுலா மாளிகையில் புகுந்த சாரை பாம்பு

சுற்றுலா மாளிகையில் புகுந்த சாரை பாம்பு

விழுப்புரம் : விழுப்புரம் சுற்றுலா மாளிகையில் புகுந்த சாரை பாம்பு பிடிபட்டது.விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில், அரசு அதிகாரிகள், தேர்தல் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோர் தங்கியுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுற்றுலா மாளிகை உள்ளே 5 அடி நீளமுள்ள சாரை பாம்பு புகுந்தது.இதனையறிந்த ஊழியர்கள், தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். விழுப்புரம் தீயணைப்பு நிலைய முன்னணி வீரர் ஷாஜகான் உள்ளிட்டோர் நேரில் சென்று, சாரை பாம்பை பிடித்து, காட்டுப் பகுதியில் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ