உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பைக் விபத்தில் வாலிபர் பலி

பைக் விபத்தில் வாலிபர் பலி

மரக்காணம் : மரக்காணம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வாலிபர் இறந்தார்.மரக்காணம் அடுத்த அனுமந்தை கிராமத்தை சேர்ந்த காளியப்பன் மகன் மணிகண்டன்,28; இவர் நேற்று முன்தினம் அதிகாலை 3.00 மணிக்கு புதுச்சேரியில் இருந்து மரக்காணம் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்துள்ளார். இவர் மீது கூனிமேடு பஸ்நிறுத்தம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த மணிகண்டனை புதுச்சேரி பிம்ஸ் மருத்தவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ