உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கண்டாச்சிபுரம் அருகே குடிநீர் தொட்டி இடிந்தது

கண்டாச்சிபுரம் அருகே குடிநீர் தொட்டி இடிந்தது

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அடுத்த காரணை பகுதியைச் சேர்ந்த சித்தேரிப்பட்டு ஊராட்சியில் குடிநீர் தொட்டி இடிந்து விழுந்தது.சித்தேரிப்பட்டு காலனியில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட குடிநீர் தொட்டி மூலம், அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக குடிநீர் தொட்டி பலவீனமடைந்து காணப்பட்டது. இருப்பினும் இந்த தொட்டியில் குடிநீர் ஏற்றி விநியோகம் செய்யும் பணி தொடர்ந்தது.மேலும், சில நாட்களுக்கு முன் பெய்த மழையின் காரணமாக இப்பகுதி மண் இளகி நேற்று மதியம் குடிநீர் தொட்டியின் துாண்கள் வலுவிழந்து இடிந்து விழுந்தது.அதிர்ஷ்டவசமாக குடிநீர் தொட்டியின் கீழே யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.தற்போது குடிநீர் தொட்டி இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு உடனடியாக தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி