உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மயிலம் அரசு பள்ளியில் ஆதார் சேவை முகாம்

மயிலம் அரசு பள்ளியில் ஆதார் சேவை முகாம்

மயிலம் : மயிலம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆதார் சேவை சிறப்பு முகாமை சேர்மன் துவக்கி வைத்தார்.மயிலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த ஆதார் சேவை சிறப்பு முகாமிற்கு மயிலம் ஒன்றிய சேர்மன் யோகேஸ்வரி மணிமாறன் தலைமை தாங்கி சேவையை துவக்கி வைத்து பேசுகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆதார் சிறப்பு முகாம் பள்ளிகளிலேயே தற்போது செயல்பட்டு வருகிறது. இது மாணவ, மாணவிகளுக்கு பயனுள்ள ஒன்றாக இருக்கும் என தெரிவித்தார். மயிலம் ஒன்றிய செயலாளர் மணிமாறன் ஒன்றிய கவுன்சிலர் செல்வகுமார், ஊராட்சி மன்றத் தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கரன் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் மதன்குமார் வாழ்த்துரை வழங்கினார்.இதில் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை