| ADDED : ஆக 22, 2024 02:07 AM
விழுப்புரம் : விழுப்புரம் சரகத்தில் சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்காவிட்டால் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.ஜி., அஸ்ரா கார்க் எச்சரித்துள்ளார்.விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்ட வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க், நேற்று டி.ஐ.ஜி., திஷாமித்தல், எஸ்.பி.,க்கள் விழுப்புரம் தீபக்சிவாச், கடலுார் ராஜாராம், கள்ளக்குறிச்சி ரஜத்சதுர்வேதி மற்றும் ஏ.டி.எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்களுடன் ஆய்வு செய்து, ஆலோசனை நடத்தினார்.அப்போது, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்களில், கள்ளச்சாராயம், போதை பொருட்கள் விற்பனை தொடர்பான புகார்கள் மீது உடன் வழக்கு பதிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் எவ்வித தாமதம் மற்றும் விதி மீறல் கூடாது. கள்ளச்சாராயம், போதைப் பொருள் விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும்.அதில் எவ்வித தாமதமும், விதிமீறல் மற்றும் முறைகேடுகள் கண்டறியப்பட்டாள், அந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.