உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க நிர்வாகிகள் கூட்டம்

ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க நிர்வாகிகள் கூட்டம்

திண்டிவனம் : திண்டிவனத்தில், மாவட்ட மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுகுமார் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் மணிவாசகம், துணைத் தலைவர்கள் மோகன கிருஷ்ணன், பார்த்தசாரதி, பாலசுப்ரமணியன், பழனி மற்றும் நிர்வாகிகள் ரத்தின வேல், ஆறுமுகம், கார்த்திக், ராமச்சந்திரன், மகளிர் அணி சுகுணா உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த பிரியன் என்பவரின் இருதய அறுவை சிகிச்சைக்காக 27 ஆயிரம் ரூபாய், சதாசிவம் மற்றும் வரதன் ஆகியோர் கல்வி உதவித் தொகையாக தலா 1000 ரூபாய் வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட, வட்டார நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை