| ADDED : ஜூன் 03, 2024 06:35 AM
வானுார், : வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், சிறப்பு ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்தது.இக்கல்லுாரியில் இந்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியது. இளங்கலை படிப்புகளான தமிழ், ஆங்கிலம், கணக்கு, கம்யூட்டர் அறிவியல், வணிகவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு, மொத்தம் உள்ள 330 இடங்களுக்கு 8,793 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். முதற்கட்டமாக சிறப்பு ஒதுக்கீட்டினருக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது.இதில், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்ணாள் ராணுவத்தினர் ஆகிய முன்னுரிமை பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடந்தது.நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கினார். துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மாணவ, மாணவியர்களின் ஆவணங்களை சரி பார்த்தனர். கலந்தாய்விற்கு பிறகு மாணவர்களுக்கு சேர்க்கைக்கான ஆணைகள் வழங்கப்பட்டது.