உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் : விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது.விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் பொன்முடி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ரத்தினம் வரவேற்றார். மாவட்ட செயலாளர் அய்யாக்கண்ணு கோரிக்கை விளக்க உரையாற்றினார். அரசு போக்குவரத்துதுறை சி.ஐ.டி.யு., சங்க பொதுச்செயலர் மூர்த்தி சிறப்புரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார், மாவட்ட தலைவர் கேசவலு, ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர் சங்க செயலாளர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி ஊழியர் சங்கம் மாவட்ட செயலாளர் அறவாழி ஆகியோர் கோரிக்கை வலியுறுத்தி பே சினர். சங்க மாவட்ட செயலாளர் மேகநாதன் நிறைவுரையாற்றினார்.புதிய சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் அனை த்து குறை பாடுகளையும் தீர்க்க வே ண்டும், முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், பழைய ஓய்வூதியத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை