உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

மயிலம் : மயிலம் அருகே உள்ள சிங்கனூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.திண்டிவனம் அதேகொம் பெண்கள் கண்ணிய மையத்தில் நடந்த முகாமிற்கு, மைய ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி வரவேற்றார். திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமி தலைமை தாங்கினார். விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக ஆலோசகர்முருகன், பள்ளி தலைமை ஆசிரியர் மணிமேகலை முன்னிலை வகித்தனர். முகாமில், பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் பாலச்சந்தர், ஆறுமுகம், பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.இறுதியில் போதை ஒழிப்பு மற்றும் குழந்தை திருமணம் ஒழிப்பு தொடர்பாக உறுதிமொழியேற்றனர். உளவியல் ஆலோசகர் எட்டியப்பன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ