| ADDED : ஜூன் 26, 2024 11:05 PM
விழுப்புரம்: கோலியனூரில் பள்ளி மாணவர்கள், தன்னார்வலர்கள் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.கோலியனூரில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காவல் துறை, ஹையர் பவர் பவுண்டேஷன், ராஜேஸ்வரி அம்மாள் அறக்கட்டளை குடி போதை மற்றும் மனநல சிகிச்சை மையம் சார்பில், போதை ஒழிப்பு மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கோனிபர் பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு விழுப்புரம் டி.எஸ்.பி., சுரேஷ், வளவனூர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் பங்கேற்று சிறப்புரையாற்றினர். அறக்கட்டளை நிர்வாகிகள் சந்திரமோகன், இளையராஜா மதியா, தனசேகர் முன்னிலை வகித்தனர். மாணவ, மாணவிகளுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கினர்.இதனையடுத்து, கோலியனூரிலிருந்து வளவனூர் வரை மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. டி.எஸ்.பி., சுரேஷ் தொடங்கி வைத்தார். பள்ளி மாணவர்கள், அறக்கட்டளை, பி.எம், தனா கலர் ஐடியாஸ், இ.எஸ். கல்வி குழுமம், கோனிபர் கல்வி குழுமம் உள்ளிட்ட தன்னார்வலர்கள் பேரணியில் கலந்துகொண்டு, போதை ஒழிப்பிற்கான விழிப்புணர்வு முழுக்கத்தை ஏற்படுத்தினர்.